ராணிப்பேட்டையில் CFTI – தமிழக அரசு இணைந்து தொடங்கிய சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்பு
🎈ராணிப்பேட்டை:
மத்திய அரசின் மத்திய காலனி பயிற்சி நிறுவனம் (CFTI) மற்றும் தமிழக அரசு இணைந்து, பெண்கள் மேம்பாட்டிற்காக சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது.
சனிக்கிழமை (16.08.2025) அன்று ராணிப்பேட்டை மாவட்டம் கல்மேல்குப்பம் கிராமத்தில் “நமது ஊர் நமது பொறுப்பு” திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டன.
இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்வில் CFTI பயிற்சியாளர்கள் பங்கேற்று லெதர் தோல் பொருட்கள் தையல் பயிற்சிக்கூடத்தை திறந்து வைத்தனர்.
பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவதோடு, 100% வேலை வாய்ப்பு உறுதி அளிக்கப்பட உள்ளது.
📌அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“இது தொடக்கம் மட்டுமே. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் விரைவில் விரிவாக்கப்படவுள்ளன. பெண்களின் பொருளாதார சுயநிறைவை வலுப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும்” என தெரிவித்தனர்.
📌 #பெண்கள் #தோல் #வேலைவாய்ப்பு #skills #training #placement #women
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்.