Thu. Aug 21st, 2025





வாட்ஸ்அப்பில் 50 அரசு சேவைகள் – எளிமையான அணுகல்:

📌சென்னை:
தமிழக மக்கள் இனி அரசு வழங்கும் 50 சேவைகளை, வாட்ஸ்அப்பின் மூலம் எளிதாகப் பெற முடியும். அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துதல், மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி செலுத்துதல், மெட்ரோ டிக்கெட் வாங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.
மக்கள் வசதிக்காக ஒரே எண் மூலம் அணுகக்கூடிய சாட்பாட் உருவாக்கப்பட்டு, எந்த நேரத்திலும் – எந்த இடத்திலும் இந்த சேவைகள் பெறக்கூடியதாக இருக்கும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படவுள்ளது.

🎈அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்:

“மக்களை மையமாகக் கொண்ட, வெளிப்படையான மற்றும் உறுதியான நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெட்டாவுடன் கூட்டணி அமைத்திருப்பது, டிஜிட்டல் மாற்றத்தின் முக்கியப் படியாகும்” என்றார்.

🎈மெட்டா நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவு இயக்குநர் ரவி கார்க் கூறுகையில்:

“வாட்ஸ்அப் என்பது மக்களுக்கு மிகவும் பழக்கமான தளம். அரசு சேவைகளை எளிதில் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கான சிறந்த இடமாக அமையும்” என்றார்.

✍️ இணை ஆசிரியர்: சேக் முகைதீன்

By TN NEWS