Thu. Aug 21st, 2025

ஒழுங்கு நடவடிக்கைக் குழு வாசித்த அறிக்கையில் பரபரப்பு:

சென்னை:
பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், அன்புமணிக்கு எதிராக 16 முக்கிய குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

1️⃣ மைக்கை தூக்கி எறிந்து, பனையூர் அலுவலகத்துக்கு வரச் சொல்லி தொண்டர்களுக்கு கைபேசி எண் வழங்கியது.
2️⃣ ராமதாஸின் புகைப்படம், பெயர் தொடர்பான விவகாரங்களில் மீண்டும் மீண்டும் அவமதிப்பாக பேசியது.
3️⃣ தைலாபுரம் கூட்டத்தில் 100 மாவட்ட செயலாளர்களை வராமல் தடுத்தது.
4️⃣ பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றியது.
5️⃣ சமூக ஊடகங்களில் ராமதாஸை குறிவைத்து இழிவான செய்திகள் வெளியிட்டது.
6️⃣ ராமதாஸின் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டி, அவருக்கே துண்டு அணிவித்தது.
7️⃣ சமரச பேச்சுவார்த்தையை நிராகரித்தது.
8️⃣ தலைமை அலுவலகத்தை, ராமதாஸுக்கு தெரியாமல் மாற்றியது.
9️⃣ ராமதாஸின் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
🔟 ராமதாஸிடம் பேசாமல், 40 முறை பேசியதாக வெளியில் பொய் கூறியது.
11️⃣ அனுமதியின்றி பொதுக்குழுவில் ‘ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க’ வேண்டியது.
12️⃣ ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது கேலி செய்தது.
13️⃣ அனுமதி மீறி நடைபயணம் செய்தது.
14️⃣ ராமதாஸால் நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தது.
15️⃣ ராமதாஸை சந்திக்க வருவோரிடம் ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு அழைத்துச் சென்றது.
16️⃣ மக்கள் தொலைக்காட்சியை அபகரித்தது.


📌 இந்த குற்றச்சாட்டுகள் பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டவுடன் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.


இணை ஆசிரியர்

சேக் முகைதீன்.

 

By TN NEWS