Thu. Aug 21st, 2025

தாண்டிக்குடி கிராமத்தில்  (15.8.2025) பட்லாங்காடு பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டி  பொதுமக்கள் பேசியதுடன் கிராம சபை கூட்ட தலைவர் S.கண்ணன் அவர்களிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தார்கள். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் 15.8.2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு பட்லாங்காடு பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தாண்டிக்குடி கிராம ஊராட்சி செயலாளர் S. கண்ணன் தலையில் காவல்துறை வனக்குறை தோட்டக்கலைத்துறை மின்சாரத்துறை வருவாய் துறை அங்கன்வாடி VHN கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் மற்றும் தாண்டிக்குடி கிராம வாக்காள பொதுமக்கள் பலர் முன்னிலையில் நடைபெற்றது.


இந்த கிராமசபை கூட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய பொதுமக்கள் பலர் தங்கள் கிராமத்திற்கு சீரான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி சாலை வசதி சாக்கடை மற்றும் கழிப்பறை வசதி மயானத்திற்கு அடிப்படை வசதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தர வேண்டும்..

இதற்கு முன்பு தாண்டிக்குடி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அது பல அதிகாரிகளால் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதால் அந்த துறைகளின் அரசு அதிகாரிகளுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள் பதிவு தபால் மூலம் அனுப்பி அந்த தீர்மானங்களை அரசு அதிகாரிகள் உடனே நிறைவேற்றிட ஊராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அதே போல் தாண்டிக்குடி பகுதியில் அடிக்கடி தொடர் மின்தடை ஏற்படுதை தடுக்க உடனே அரசு கூடுதல் பணியாளர்களை நியமித்து உடனே மின்தடையை சீர் செய்திடவும் புதிய துணை மின்நிலையம் விரைவில் அமைத்து தங்குதடையின்றி சீரான மின்சாரம் வழங்கிடவும்

தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு என்று தனியாக நிரந்தர மருத்துவர்கள் மருத்தாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமித்து தரமான சிகிச்சை வழங்கிட வேண்டும்.

தாண்டிக்குடி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூராக சாலை மற்றும் தெருக்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அதிகாரிகள் இனியும் காலம் கடத்தாமல் உடனே பாரபட்சமின்றி அகற்றிட வேண்டும்.

தாண்டிக்குடி ஊராட்சிப் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் வீடுகள்  மற்றும் காட்டேஜ்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனே முறையான வரிவசூல் செய்திட வேண்டும்.

தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் செயல்படாமல் மூடிக்கிடக்கும் அரசுக்கு சொந்தமான  பழைய அரசு கட்டிடங்களை உடனே  பராமரிப்பு செய்தோ அல்லது இடித்து விட்டோ அந்த அரசு இடத்தில் உடனே புதிய அரசு கட்டிடங்களை கட்டி தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை உடனே இயக்கிட வேண்டும்.

தாண்டிக்குடி கிராமத்திற்கு பல மாதங்களாக வராமல் இருக்கும் மூன்று தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்து விட்டு அதற்கு பதில் அரசு பேருந்துகளை இயக்கிட வேண்டும்.

தாண்டிக்குடி பகுதியில் தற்போது திருட்டுக்கள் குற்றங்கள் அதிகமாக நடப்பதை தடுத்திட உடனே காவல்துறையினர் காலை மாலை நேரங்களில் அடிக்கடி ஊருக்குள் ரோந்து சென்றிடவும் அதே போல் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை செய்து குற்றம் செய்தவர்கள் மீது உடனே முறையாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்

தாண்டிக்குடி கிராம ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்படும் அரசு கட்டிடங்கள் தரமாக இல்லாததால் அதை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனே முறையாக ஆய்வு செய்து அந்த அரசு கட்டிடம் தரமான முறையில் தரமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டால் மட்டுமே அதற்கு உரிய பில் பணத்தை தர வேண்டும்.

தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள முக்கியமான இடங்களில் உடனே CCTV கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுத்திட வேண்டும்.

தாண்டிக்குடி கிராமத்தில் பனிபுரிந்து வரும் காவலர்கள் மருத்துவர்கள் வருவாய்துறை மின்துறை மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு மற்ற ஊர்களில் உள்ளது போல் தாண்டிக்குடியிலும் உடனே அரசு அலுவலர் குடியிருப்பு வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

இது போன்று இன்னும் பல்வேறு  அரசு உடனே செய்து தர வேண்டும் என்று தாண்டிக்குடியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பேசினார்கள். அதற்கு சம்மந்தப்பட்ட துறைகளின் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள்
பின்பு சித்தன் அவர்கள் நன்றி கூறினார்.

என்ற தகவலை அனைத்து ஊடக நண்பர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி.
இப்படிக்கு,
தாண்டிக்குடி கணேஷ்பாபு
சமூக ஆர்வலர்.
செல் 9159084529

இணைப்பு.
தாண்டிக்குடியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கணேஷ்பாபு மனு கொடுத்த போட்டோ மற்றும் கிராமசபை புகைப்படங்கள்.

சேக் முகைதீன்.

தமிழ்நாடு டுடே மீடியா

இணை ஆசிரியர் .

By TN NEWS