📍 இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு & பூதலூர் ஒன்றியம்
📍 கோரிக்கை வைத்தவர்: ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.
📍 பெறுநர்: திருமதி பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர்.
✅முக்கிய அம்சங்கள்:
மழையிலும் குறுவை அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வயல்களில் டிராக்டர் செல்ல முடியாமல், அதிக வாடகையில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படுகிறது.
அம்மையகரம், வரகூர், கண்டமங்கலம், செந்தலை, அம்பதுமேல்நகரம் உள்ளிட்ட கிராமங்களில் நெல் குவியல் காய வைப்பதில் சிரமம்தான்.
ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), 16 (கோகுலாஷ்டமி), 17 (ஞாயிறு) ஆகிய மூன்று தினங்கள் விடுமுறை; கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் அபாயம்.
நெல் மூட்டைகளை மூடி வைக்க போதுமான தார்பாய், சாக்கு போன்றவை விவசாயிகளிடம் இல்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவால் விடுமுறையிலும் கொள்முதல் நடந்தது.
பழைய கிழிந்த சாக்குகள் வழங்கப்படுவதால் நெல்மணிகள் சேதமடைகின்றன; புதிய சாக்குகள் வழங்க கோரிக்கை.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்படாமல் மழையில் நனைந்து வருகின்றன; கூடுதல் லாரிகள் அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டுடே மூலமாக விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது. நிரந்தர தீர்வு கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
A.K.R.ரவிச்சந்தர்
தமிழ்நாடு டுடே – தஞ்சாவூர் மாவட்டம்.