“சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவப்பு லேன்யார்டு அணிய” டிஜிபி உத்தரவு – ஆனால் பல்வேறு காவல் நிலையங்களில் செயல்படுத்தாமல் பொதுமக்களை ஏமாற்றும் நிலை தொடருகிறது.
சென்னை:
தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய பெரும் கவலையை தெரிவித்து வருகின்றனர். காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளர்களும், சிறப்பு உதவி ஆய்வாளர்களும் ஒரே மாதிரியான சீருடையில் செயல்படுவதால், பொதுமக்கள் யார் அதிகாரப்பூர்வ விசாரணை அதிகாரி, யார் இல்லாதவர் என்பதைத் தெளிவாக அறிய முடியாமல் பரிதவிக்கின்றனர்.
இத்தகைய குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக டிஜிபி முன்னதாகவே ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் (SSI – Special Sub Inspectors) அவர்கள் சிவப்பு நிற லேன்யார்டு (Red Lanyard for Whistle) அணிய வேண்டும் என்பதுடன், அவர்களை உதவி ஆய்வாளர்களாகத் தவறாகக் காட்சிப்படுத்த கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (SP/DCP) கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஆனால் பல்வேறு காவல் நிலையங்களில் இதற்கு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்பது சமூக ஆர்வலர்களின் கடும் குற்றச்சாட்டு.
இது மட்டுமல்லாது, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கடந்த காலங்களில் நீதிமன்ற ஆவணங்களில் தங்கள் பதவியை “உதவி ஆய்வாளர்” என பொய் கூறி கையொப்பமிட்டு தாக்கல் செய்த நிகழ்வுகளும், விசாரணைகளில் மீறலாக செயற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இது பொதுமக்கள் நம்பிக்கையை பெரிதும் பாதித்து வருகிறது.
கேரளா போன்ற மாநிலங்களில் இந்த பிரிவுகளை விரிவாக விளக்கும் வகையில், Sub Inspector மற்றும் Assistant Sub Inspector ஆகிய இருவரும் வேறு-வேறு பதக்கங்களுடன் (Stars) செயல்படுவதால் பொதுமக்கள் எளிதாக வேறுபாடு புரிந்து கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இது திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் வேதனை.
இதனால் காவல் நிலையங்களில் முக்கிய விசாரணைகள் கீழ்நிலை அலுவலர்களிடம் நிறைவடைவதாலும், உண்மையான தீர்வுகள் வழங்கப்படாமல் கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருகி வருவதாகவும், இது சட்ட ஒழுங்கு சீர்குலைவிற்கு நேரடியான காரணமாக இருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனைத் தடுக்கும் ஒரே வழி, டிஜிபி உத்தரவை உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் நடைமுறைப்படுத்துவதே என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இணை ஆசிரியர்
சமூக ஊடகங்கள்
தமிழ்நாடு டுடே.