திருப்பூர் ஜூலை 23,
*மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.*
*நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.*
*தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.*
*தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி கடையை உடைத்தது தொடர்பாக கலெக்டர், எஸ் பி. முதலமைச்சர் என தொடர்ச்சியாக பல்வேறு புகாரளித்த பிறகு தான் காவல் துறை விசாரணைக்கு அழைத்து தற்போது சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்..*
*மேற்படி சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி, நெடுஞ்சாலை துறைக்கு சம்மன்.*
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாற்றுத்திறனாளி பாலாஜியின் கடையை JCB மூலமாக அடித்து நொறுக்கி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி மாற்றுத்திறனாளிகளை அவமானம் படுத்திய நகர் மன்ற தலைவர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஆட்சியர், SP, DSP. உள்ளிட்டவர்களிடம் புகாரளித்த பிறகும் கூட எவ்வித நடவடிக்கைகள் எடுக்காமல் தவறு செய்தவருக்கு சாதகமாக செயல்படுகின்ற தாராபுரம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிந்து சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பை அரசும் மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்வது சம்பந்தமாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் இது தொடர்பாக தாராபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஈ.பி.அ.சரவணனை நேரிடையாக விசாரணைக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள சங்க நிர்வாகிகள் கணபதி, ரமேஷ்குமார், சுரேஷ், காந்திமதி, இராமசாமி, சரஸ்வதி, மகேஸ்வரி, மூர்த்தி, வெங்கடேஷ், திருமுருகன், ஜான் மெண்டேன்சா, அன்னால் ஆரோக்கிய மேரி, முருகலட்சுமி, காளிமுத்து, உள்ளிட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணைகளில் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக சுமார் 3.மணி நேரம் தொடர் விசாரணை நடந்து நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டுமென வலியுறுத்திய நிலையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
அதில் ஈ.பி.அ.சரவணன் திருப்பூர் நுகர்வோர் நலமுன்னேற்ற சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மேற்படி சங்கத்தின் உறுப்பினராக உள்ள தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 33/36 புது சித்ராவுத்தன்பாளையம் டவுன் ஓடைத்தெரு தாராபுரம் என்ற முகவரியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி திரு.பாலாஜி என்பவர் டவுன் ஓடைத்தெரு 3வது வார்டு புனித அந்தோணியார் பள்ளி எதிரில் உள்ள காலி இடத்தில் நடத்திவந்த காய்கறிக்கடையை தாராபுரம் நகராட்சியில் சிலர் தூண்டுதலின் பேரில் நகராட்சி சேர்மேன் திரு. பாப்புக்கன் அவர்களின் ஓட்டுநராக வேலை செய்துவரும் சரண் மற்றும் சிலர் இடித்து சேதபடுத்திவிட்டதாகவும் அது சம்மந்தமாக நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் மாற்றுத்திறனாளி பாலாஜியை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்திய நகர் மன்ற தலைவர் மீதும் நடவடிக்கை கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நிலையம் ஆஜரான மனுதாரரை விசாரித்தும் அதன் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
*தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.*
சரவணக்குமார்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.