Thu. Aug 21st, 2025


பெரும்பாடி புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள பள்ளத்தில் விபத்து – போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்…

குடியாத்தம், ஜூலை 24:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டி, ராஜீவ் காந்தி நகர், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 55), தந்தை பெயர் ரத்தினம் என்பவர், பெரும்பாடி ரோட்டில் அமைந்துள்ள புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள சுமார் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்ததால் உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும், குடியாத்தம் நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டனர். பின்னர், உரிய சட்டப்படி உடற்கூறு ஆய்விற்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

– குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS