Tue. Jul 22nd, 2025

உசிலம்பட்டி
17.01.2025

உசிலம்பட்டி அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசெம்மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.,இங்கு 5586 எண் உள்ள அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.,

இந்நிலையில் இந்த அரசு மதுபானக் கடை சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வருவதாகவும், இதனால் குடிகாரர்கள் குடித்துவிட்டு பொது மக்களிடம் தகாத வார்த்தைகளில் கூறி வந்ததாகவும், பெண்கள் தோட்டத்துப் பகுதிகளுக்கு ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு சென்றுவர முடியவில்லை என பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாகவும், இது குறித்து கிராம மக்கள் அரசு அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.,

இதனால் அரசு மதுபான கடையின் முன்பு 100 க்கும் மேற்பட்டோர்  உட்கார்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த உத்தப்ப நாயக்கனூர்  போலீசார் அதிகாரிகளிடம் பேசி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 15 நாட்களுக்குள் மதுபான கடை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் முற்றுகைப்  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வீர சேகர் – மதுரை மாவட்டம் – செய்தியாளர்.

By TN NEWS