கும்பகோணம், ஏப்ரல் 16:
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது மிக முக்கியமான ஒன்றாகும். பலர் இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பது குறித்து குழப்பத்தில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இதற்கான ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://electoralsearch.eci.gov.in/
என்ற முகவரியை பயன்படுத்தலாம்.
இந்த இணையதளத்தில் “Search in Electoral Roll” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, கீழ்க்கண்ட மூன்று வழிகளில் உங்கள் விவரங்களை சரிபார்க்கலாம்:
EPIC எண்ணின் மூலம் (Search by EPIC):
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு எளிதாக தேடலாம்.
விவரங்களின் மூலம் (Search by Details):
பெயர், தந்தை/கணவர் பெயர், வயது, பாலினம், மாவட்டம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து தேடலாம்.
மொபைல் எண்ணின் மூலம் (Search by Mobile):
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி OTP மூலம் சரிபார்க்கலாம்.
தேவையான தகவல்களை நிரப்பிய பிறகு, Captcha குறியீட்டை சரியாக உள்ளிட்டு “Search” பொத்தானை அழுத்தினால், உங்கள் வாக்காளர் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் “View Details” என்பதை கிளிக் செய்து முழு விவரங்களையும் பார்க்கலாம்.
மேலும், “Print Voter Information” அல்லது “Download” என்ற விருப்பத்தை பயன்படுத்தி, உங்கள் வாக்காளர் தகவலை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளவும் முடியும்.
இதற்கு மாற்றாக, உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் “Voter Helpline” செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் “Search Your Name in Electoral Roll” என்ற விருப்பத்தை பயன்படுத்தியும் உங்கள் பெயரை சரிபார்க்கலாம். புதிய பயனர்கள் “New User” என்பதை கிளிக் செய்து பதிவு செய்து பயன்படுத்தலாம்.
தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலாகும்.
ஷேக் முகைதீன்
