சின்னசேலம், மார்ச் 26:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மேற்குப் பகுதியில், ஜெயா மஹால் அருகில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் துர்நாற்றம் வீசும் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி வரும் தொடக்கப்பள்ளியின் காம்பவுண்டை ஒட்டியே குப்பைகள் கொட்டப்படுவதுடன், குப்பை சேகரிக்கும் வாகனமும் அங்கு நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், குறிப்பாக சிறுவர்கள், கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பள்ளி வளாகத்தின் இருபுறங்களிலும் முடி திருத்தும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் சுகாதார நிலையை பாதிக்கக் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பணபலம் கொண்டவர்களின் வீடுகள் அல்லது விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் அருகில் இத்தகைய கழிவுகள் கொட்டப்படாமல் இருக்க, ஏழை மாணவர்கள் பயிலும் பள்ளி அருகில் மட்டுமே இத்தகைய அலட்சியம் காட்டப்படுவது பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை சந்தேகத்திற்குள்ளாக்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் உடனடி நடவடிக்கை எடுத்து, பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வி. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி, தமிழ் நாடு டுடே