குடியாத்தம், மார்ச் 26:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கல்லூர் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 4 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நிலைய கண்காணிப்பு குழுவினர் வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன் தலைமையில், தலைமைக் காவலர் மணிகண்டன் மற்றும் பெண் காவலர் உஷா பர்வீன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், ஆந்திர மாநிலம் பலம்நேர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் திருமண நிகழ்ச்சிக்காக பொருட்கள் வாங்க ரூ.4 லட்சம் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை குடியாத்தம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தனலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்