⚠️ கள்ளக்குறிச்சி: பேருந்து நிலையம் செல்லாமல் நடுவழியில் இறக்கப்படும் பயணிகள் – பொதுமக்கள் கடும் அவதி!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சி வரும் அரசு பேருந்துகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் நான்கு முனை சந்திப்பில் பயணிகளை இறக்கி விடும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
📌 பிரச்சனையின் விவரம்:
பெங்களூரிலிருந்து வரும் அரசு பேருந்துகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் நான்கு முனை சந்திப்பில் நிறுத்தப்படுகின்றன.
இதனால் இரவு நேரங்களில் பயணம் செய்யும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
📌 பணியாளர்களின் அநாகரிகம்:
பயணிகள் “பேருந்து நிலையத்திற்கு செல்லுங்கள்” என்று கேட்டால்,
👉 “இறங்குயா கீழே” என்று நடத்துனர் கடுமையாக பேசுவதாக குற்றச்சாட்டு
👉 “எங்கே வேண்டுமானாலும் போய் புகார் செய்யுங்கள்” என அநாகரிகமாக பதில் அளிப்பதாக கூறப்படுகிறது

📌 புகார் மற்றும் நடவடிக்கை:
இதுகுறித்து பயணிகள் நேரில் பணிமனை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்
பயணிகள் புகார் எண் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து, பெங்களூரிலிருந்து வரும் அரசு பேருந்துகள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்குள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்
❗ பொதுமக்களின் கேள்விகள்:
பயணிகள் பாதுகாப்பு ஏன் புறக்கணிக்கப்படுகிறது?
அரசு பேருந்துகள் விதிமுறைகளை ஏன் மீறுகின்றன?
பணியாளர்களின் அநாகரிகத்திற்கு யார் பொறுப்பு?
✊ கோரிக்கைகள்:
👉 அனைத்து பேருந்துகளும் கட்டாயம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல வேண்டும்
👉 இரவு நேர பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்
👉 சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
📍 கள்ளக்குறிச்சி மாவட்டம்
✍️ V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி
