Mon. Mar 23rd, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட 70-செஞ்சி, 71-மயிலம், 72-திண்டிவனம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப் பார்வையாளராக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பாவ்சாஹேப் தாங்கடே IAS அவர்கள், மார்ச் 19, 2026 அன்று செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

📌 ஆய்வின் முக்கிய அம்சங்கள்:

வாக்குச்சாவடி அமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள்

தேர்தல் பணியாளர்களின் தயார்நிலை

வாக்காளர் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு


📌 அதிகாரிகள் உடன் இருந்தனர்:

வட்டாட்சியர்கள்: கார்த்திகேயன், கண்ணன்

தேர்தல் துணை வட்டாட்சியர்கள்: உமா மகேஸ்வரி, சார்லஸ்

வருவாய் ஆய்வாளர்கள்: ரமேஷ், கண்ணன், செல்வம்

கிராம நிர்வாக அலுவலர்கள்: ராஜாராம், சரவணன், ராஜா


இந்த ஆய்வு மூலம் தேர்தல் பணிகள் ஒழுங்காகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

📍 விழுப்புரம் மாவட்டம்
✍️ முதன்மை செய்தியாளர்: தமிழ். மதியழகன்

By TN NEWS