Thu. Mar 19th, 2026

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கணிதத் துறை சார்பாக MATH FEST 2026 நிகழ்ச்சி மார்ச் 18 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஜே. எபனேசர் தலைமை தாங்கினார். கணிதத் துறை தலைவர் மற்றும் துணை முதல்வர் முனைவர் எஸ். கருணாநிதி வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஆம்பூரில் உள்ள மசுருலூம் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் ஆர். ஜோதிலட்சுமி கலந்து கொண்டு “இன்றைய வாழ்வில் கணிதத்தின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில், கணிதம் எதிர்கால தொழில்நுட்பங்களின் அடிப்படை மொழியாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது என கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி, இணைய பாதுகாப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற துறைகளில் கணிதம் புதுமைக்கு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது என்பதை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இணை பேராசிரியர்கள் டாக்டர் ஏ. ஸ்ரீதர், டாக்டர் என். கெஜலட்சுமி, டாக்டர் எஸ். செந்தில்குமார், டாக்டர் எல். விக்ரமன், டாக்டர் எம். மலர்விழி, டாக்டர் பி. புவியரசு, பேராசிரியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் சுமார் 300 மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம்.

By TN NEWS