Thu. Mar 19th, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் நகரப் பகுதிகளில், 046 குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டா சுப்பையா தெரு பகுதியில், வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று (18.03.2026) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் தலைமை தாங்கினார். வாக்களிப்பதன் முக்கியத்துவம், ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கின் மதிப்பு, கட்டாயமாக வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், தேர்தலில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் வருவாய் ஆய்வாளர்கள், நகராட்சி துறை அலுவலர்கள், சமுதாய அமைப்பாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம்.

By TN NEWS