Thu. Mar 5th, 2026

வேலூர், மார்ச் 3:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராவரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பூச்சிகள் இருந்ததாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிகள் இருப்பதை குழந்தைகளின் பெற்றோர்கள் கவனித்து, அதுகுறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டபோது, அவர் முறையாக பதிலளிக்காமல் அவதூறாகவும் மரியாதையற்ற வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் “இப்படித்தான் இருக்கும், உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்” என்று திமிராக பதிலளித்ததாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அங்கன்வாடி பணியாளரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS