நாமக்கல், மார்ச் 3:
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (NECC) கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 2) ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.60 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாசி மாத பண்டிகைகள், ரம்ஜான் நோன்பு தொடக்கம் மற்றும் கிறிஸ்தவர்களின் தவக்காலம் போன்ற காரணங்களால் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்ட செய்தியாளர்: B. ரஞ்சித்குமார்