Thu. Apr 23rd, 2026

மார்ச் 3

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி நகராட்சி துவக்கப் பள்ளியில் 2026–2027 கல்வியாண்டிற்காக முதல் வகுப்பில் 10 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு கேசவன் எழுதுகோல் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து அவர் மாணவர்கள் கல்வியில் முன்னேறி பள்ளியின் பெருமையை உயர்த்த வேண்டும் என உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் திரு பரமசிவம் வெங்கட் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் இராசி தலித் குமார் கலந்து கொண்டார்.

உதவி ஆசிரியர்கள் செர்லி, கோமதி மற்றும் பல பெற்றோர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குடியாத்தம் தாலுகா
கே.வி. ராஜேந்திரன், செய்தியாளர்

By TN NEWS