கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…!
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன், மாணவி இருவரும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில், ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் வழங்கிய பயிற்சியின் மூலம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் K. ஸ்ரீராம், மணல் சிற்பப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
அதே பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி S. தனுஸ்ரீ, ஓவியப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்.
🎖️ பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கல்.
இந்த சாதனைக்காக, 13.02.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்களும்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களும், மாணவர்களை நேரில் பாராட்டி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர்.
மேலும், மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி வழங்கிய பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டினார்.
இந்த நிகழ்வின் போது, திருக்கோவிலூர் வட்டார கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
செய்தி :
✍️ V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

