Fri. Feb 6th, 2026

“அய்யலூர் தக்காளிக்கு GI டேக் வழங்க வேண்டும்” – கருத்தரங்கில் வலியுறுத்தல்.

திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசுப் பள்ளி மாணவனாகத் துவங்கி, பொறியாளராக உயர்ந்து Landscaping துறையில் உலகப் புகழ்பெற்ற Burj Khalifa (Dubai), World Miracle Garden (Dubai), Seeb Sea Front (Muscat) போன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்காக, என் ஊர் என் கனவு – தொலைநோக்கு திண்டுக்கல் 2030 கருத்தரங்கில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தின் ஏற்பாட்டில் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் அவர்களால் “திண்டுக்கல் மண்ணின் மைந்தர்கள்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

அப்போது, என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ், அய்யலூர் மற்றும் வடமதுரை பகுதிகள் தக்காளி விளைச்சலுக்குப் பெயர் பெற்றவை என்பதைக் குறிப்பிட்டார். விலை வீழ்ச்சி – விலை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலையை எடுத்துரைத்த அவர்,
“அய்யலூர் தக்காளி”க்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கவும், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் அமைக்கவும் வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன் மூலம் தக்காளி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு, நிலையான வருமானம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

By TN NEWS