Fri. Feb 6th, 2026

ரூ.112 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலகத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் :
ஏரல் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் இன்று அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பேரூராட்சிகள் துறையின் மூலதன மானிய நிதித் திட்டம் 2022–23ன் கீழ், ரூபாய் 112 லட்சம் மதிப்பீட்டில் இந்த புதிய அலுவலகக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் பா. சுப்பிரமணியன் முன்னிலையில், பேரூராட்சி சேர்மன் சர்மளா தேவி மணிவண்ணன் குத்துவிளக்கு ஏற்றி புதிய அலுவலகக் கட்டிடத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஏரல் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள், முஸ்லிம் வணிகர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அனைத்து மதத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

புதிய அலுவலகக் கட்டிடம் திறப்பு மூலம், பேரூராட்சி நிர்வாகப் பணிகள் மேலும் விரைவாகவும், மக்களுக்கு எளிதாகவும் நடைபெறும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமிழ்நாடு டுடே செய்தியாளர்.

 

By TN NEWS