Wed. Feb 4th, 2026

குடியாத்தம், பிப். 2:
குடியாத்தம் வட்டத்திற்கு உட்பட்ட கூடநகரம் மதுரா பூசாலிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த சங்கீதா (வயது 21, கணவர்: ராஜேஷ்) இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலை நேரத்தில் சம்பவம்:

02.02.2026 அன்று காலை சுமார் 7.00 மணி அளவில், சங்கீதா தமது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர்.

மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு:

இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப விவரங்கள்:

இறந்த சங்கீதாவிற்கு திருமணம் ஆகி சுமார் நான்கு ஆண்டுகள் ஆகி உள்ளதாகவும், அவரது கணவர் ராஜேஷ் (வயது 30) முடி திருத்தும் தொழில் செய்து வருவதாகவும் கிராம விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை மற்றும் 10 மாத ஆண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை:

இந்த சம்பவம் தொடர்பாக கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி தொகுப்பு:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS