Fri. Feb 27th, 2026

தமிழ்நாடு அரசு SC/ST அலுவலர்–ஆசிரியர் நல சங்கம் சார்பில் ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், அவர்களின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 1ஆம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, செருவங்கி பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் கோட்டீஸ்வரன் தலைமை வகித்தார். செருவங்கி ஊர் நாட்டாமை மணவாளன் மற்றும் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக இந்தியா குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் கலந்து கொண்டு, ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மேற்கொண்ட அரசியல் பணிகளை நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் மது சரத்குமார், பேராசிரியர் விஜயரங்கம், ஆசிரியர்கள் சுரேஷ், காமராஜ், உடற்கல்வி ஆசிரியர் தனஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியை குடியாத்தம் தாலுகா

செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS