Fri. Feb 27th, 2026

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட் பேருந்து நிலையம் அருகே, இந்திய தொழிற்சங்க மையம் (C.I.T.U) வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர்கள் செங்கொடி சங்கம் சார்பில், தமிழக அரசு மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேனரி தொழிற்சாலைகளில் வெளியேறும் விஷவாயுக்களால் தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இதனைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் 29.01.2026 மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் வ. அருள்சீனிவாசன் தலைமை தாங்கினார். தோழர்கள் C.N. ராம்குமார், M. ராஜா, R. கோவிந்தராஜ், M. முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். C.I.T.U மாவட்ட தலைவர் D. முரளி தொடக்க உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து C.I.T.U தலைவர்கள் M. காசி, C. சரவணன், V. நாகேந்திரன், S. சிலம்பரசன், K. சாமிநாதன், P. குணசேகரன், S. ஏகலைவன், S. கோட்டீஸ்வரன், G.R. கோவிந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் S. பரசுராமன் முடிவுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டேனரி தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
K.V. ராஜேந்திரன்

By TN NEWS