குடியாத்தம் | ஜனவரி 29
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு வட்டாரத் தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் கோட்ட செயலாளர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தனர். வட்ட பொருளாளர் காந்தி வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில், கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் கிராம நிர்வாக அலுவலகங்களை கழிப்பறை, குடிநீர், இணைய வசதிகளுடன் கூடிய நவீன அலுவலகங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், கிராம நிர்வாக அலுவலர்களை TNPSC மூலம் நேரடி நியமனம் செய்யும் முறையில், கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பதவி உயர்வு எட்டாக்கனியாக உள்ள நிலையில்,
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும்,
20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என கோரினர்.
அதேபோல், கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வில் 30 சதவீதமாக உள்ள விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்தி, பதவி உயர்வுக்கான கால வரம்பை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையிலும், சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையிலும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் வட்ட துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்