நெல்லை ராமையன்பட்டியில் இந்து–முஸ்லிம்–கிறிஸ்தவர்கள் இணைந்து நடத்திய சமூக ஒற்றுமை & தேசிய ஒருமைப்பாட்டின் முன்மாதிரி நிகழ்வு…..!
திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு 700 பேருக்கு சேவை…!
திருநெல்வேலி | ஜனவரி 11 :
இந்தியா பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து வாழும் நாடு என்பதற்கான உயிர்ப்பான சான்றாக, திருநெல்வேலி மாவட்டம் நெல்லை ராமையன்பட்டியில் நடைபெற்ற மும்மத சமூக ஒற்றுமை நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களுக்கிடையேயான மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் நோக்கில், ராமையன்பட்டியில் இயங்கி வரும் சுடர் ஒளி உணவகம், சுடர் ஒளி பேன்சி ஸ்டோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் இணைந்து இந்த மனிதநேய நிகழ்வை முன்னெடுத்தனர்.
பாதயாத்திரை பக்தர்களுக்கு மனிதநேய சேவை.
திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பயணக் களைப்பை குறைக்கும் வகையில்,
சுமார் 700 பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள்
பிஸ்கட், பாதாம் பால் ஆகியவை வழங்கப்பட்டன.
மத வேறுபாடுகளைத் தாண்டி, மனிதனுக்கு மனிதன் உதவ வேண்டும் என்ற உயரிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்த சேவை, பக்தர்களிடமும் பொதுமக்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது.
சமூக ஒற்றுமையின் வலுவான வெளிப்பாடு:
ஒரே மேடையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து செயல்பட்ட இந்த நிகழ்வு,
“மதங்கள் வேறாக இருந்தாலும் மனிதநேயம் ஒன்றே”
என்ற கருத்தை நடைமுறையில் நிரூபித்தது.
இத்தகைய நிகழ்வுகள், சமீப காலங்களில் சமூகப் பிளவுகளை விதைக்கும் முயற்சிகளுக்கு எதிரான நல்லிணக்க பதிலாகவும்,
இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவம், சகோதரத்துவம், மதச் சுதந்திரம் ஆகிய அடிப்படை மதிப்புகளின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது.
நிகழ்வின் தலைமையும் பங்கேற்பும்:
இந்த மனிதநேய மற்றும் தேசிய ஒற்றுமை நிகழ்ச்சிக்கு,
மானூர் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான திரு. கே.ஏ. மஸ்தான் தலைமை தாங்கினார்.
மேலும்,
ஊர் நாட்டாமை கிருஷ்ணா பர்னிச்சர் – திரு. மணி பிள்ளை
நம்பி டிராவல்ஸ் அதிபர் – தெரு ஆறுமுகம் யாதவ்
ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தினர்.
சிறப்பு விருந்தினராக,
மானூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மிலிட்டரி வழக்கறிஞருமான திரு. ஜே. சந்திரசேகர் கலந்து கொண்டு,
“தேசிய ஒருமைப்பாடு என்பது சட்டங்களில் மட்டும் அல்ல; மக்கள் செயல்களில் வெளிப்பட வேண்டும்”
என வலியுறுத்தி உரையாற்றினார்.
மேலும்,
ரியல் எஸ்டேட் – திரு. கண்ணன்
பாஞ்சாலங்குறிச்சி – திரு. சாமியார்
ஐஸ்வர்யா மஹால் மேனேஜர் – திரு. சாமுவேல்
சோபா மணி
தோழர் கிருஷ்ணன்
டிராவல்ஸ் அதிபர் – திரு. சங்கிலி
கோத்தாரி மாரியப்பன்
கோபால கிருஷ்ணா மெக்கானிக் – திரு. சுதர்சன்
உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, சமூக நல்லிணக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கான செய்தி.
இந்த நிகழ்வு,
மதங்கள் மக்களைப் பிரிப்பதற்கல்ல
மனிதநேயத்தை வளர்ப்பதற்கே
சமூக சேவையே உண்மையான தேசபக்தி
என்ற செய்தியை வலுவாக வெளிப்படுத்தியது.
இத்தகைய மும்மத ஒற்றுமை நிகழ்வுகள், தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் முன்மாதிரிகளாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
செய்தி : ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே

