Sun. Jan 11th, 2026

ஜனவரி 6

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னோடிய திட்டமான ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், இன்று காலை மாணவ–மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் எபெனேசர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த்,வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ–மாணவியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, திட்ட இயக்குனர் காஞ்சனா,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன்,குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன்,ஒன்றிய பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்தத் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுமார் 3,000 மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ–மாணவியர்களுக்கு சுமார் 912 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ–மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS