Fri. Feb 27th, 2026

விக்கிரவாண்டி | விழுப்புரம் மாவட்டம் | டிசம்பர் 22, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், (22.12.2025) அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியம், கெடார் (செல்லங்குப்பம்) ஊராட்சியில், ரூ.56.80 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,
கழக துணைப் பொதுச் செயலாளர்,
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர்,
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் K. பொன்முடி அவர்களின் வழிகாட்டுதலின்படி,

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்
டாக்டர் கௌதம் சிகாமணி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் குத்துவிளக்கேற்றி, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்

இந்த நிகழ்ச்சியில்,

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா

வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சேகர்

தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் நாராயணன்

பொதுப்பணி துறை தலைமை கண்காணிப்பாளர் செல்வக்குமார்

உதவி செயற்பொறியாளர் பாலாஜி

வட்டார வளர்ச்சி அலுவலர் சிவநேசன்

அரசு அலுவலர்கள்

மேலும்,

ஒன்றியக்குழு பெருந்தலைவர் கலைச்செல்வி

ஒன்றியக்குழு துணைத் தலைவர் D. வீரராகவன்

ஒன்றிய கவுன்சிலர் கருணாகரன்

ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா மணி

துணைத் தலைவர் ஆஞ்சலீனா

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம்

துணைத் தலைவர் பாலாஜி

மாவட்ட கவுன்சிலர்கள் K. சிவக்குமார், மீனா வெங்கடேசன்

உட்பட, ஒன்றிய கழக செயலாளர்கள்
கல்பட்டு V. இராஜா, R. முருகன், RP. முருகன், வேம்பி J. ரவி, ஜெயபால், மும்மூர்த்தி, கில்பர்ட்ராஜ்,

மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த அரசு மாதிரி பள்ளி, கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வசதிகளை வழங்கும் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS