குடியாத்தம் | டிசம்பர் 22
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட அசோக்நகர் இந்திராகாந்தி தெருவில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், பல்வேறு மனுக்கள் அளித்தும், இதுவரை சாலை அமைக்கப்படாத நிலையில், இன்று குடியரசு கட்சி மண்டல செயலாளர் இரா.சி. தலித் குமார் மற்றும் புதிய நீதி கட்சி மாவட்ட தொழிலாளர் பிரிவு செயலாளர் திரு. மூர்த்தி ஆகியோர், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நேரில் சென்று சாலை அமைத்து தரக் கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உடனடியாக சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
