Sat. Jan 10th, 2026

குடியாத்தம், டிசம்பர் 21:

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அமைந்துள்ள செதுக்கரை எபிரோன் திருச்சபையில், மோகன் சிங் ஊழியத்தின் 25-ஆவது வெள்ளி விழாவும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை வழங்கினார். அவருடன் 36-ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ம. மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு திருச்சபை பேராயர் மணி மைக்கல் தலைமை தாங்கினார். இதில் சமூக சேவை நோக்கில்,
30 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், 250-க்கும் மேற்பட்ட விதவை மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு இலவச புடவைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி, கிறிஸ்மஸ் பண்டிகையின் மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக பொதுமக்கள் பாராட்டினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS