கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் செல்போன் டார்ச் ஒளியுடன் காத்திருப்பு போராட்டம்!
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள், செல்போனில் டார்ச் லைட் ஒளிரவிட்டு அமைதியான காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில், தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்,
கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,
மேலும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
செவிலியர்கள் தரப்பில், இந்த போராட்டம் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல், பணியின் மரியாதையையும் பொறுப்பையும் காக்கும் வகையில் அமைதியாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி