சின்னமனூர், டிசம்பர் 18 :
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட சீப்பாலக்கோட்டை சாலை, BSNL அலுவலகம் எதிரில் நீண்ட நாட்களாக குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தன.
பொதுமக்கள் வீசிச் சென்ற கழிவுகள் தினசரி அகற்றப்படாததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை அல்லது முறையான மேற்பார்வை இல்லாமை காரணமாக குப்பைகள் தினசரி அள்ளப்படாமல் தேங்கியதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தகவலறிந்த சின்னமனூர் நகராட்சி நிர்வாகம், இன்று (18.12.2025) காலை அதிரடி நடவடிக்கையாக JCB இயந்திரம் மூலம் தேங்கிக் கிடந்த குப்பைக் குவியல்களை முழுமையாக அகற்றியது. அகற்றப்பட்ட குப்பைகள் நகராட்சி லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், மீண்டும் குப்பைகள் தேங்காமல் இருக்க தூய்மைப் பணியாளர்களை கொண்டு தினசரி கழிவுகள் அகற்ற நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்களும், தமிழ்நாடு டுடே இதழ் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
செய்தி தொடர்பாளர்
அன்பு பிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர் & புகைப்படக் கலைஞர்