தென்காசி, டிச.17 :
தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியில் உள்ள வேலாயுதபுரம் சாலையை ஒட்டிய விளைநிலங்களில், விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் மற்றும் நாற்றுகள் சேதமடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
அப்பகுதியில் சிலர் பன்றிகளை வளர்த்து வருவதால், அவை அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பன்றிகளை வளர்ப்பவர்களிடம் தெரிவித்த போதும், உரிய கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் விவசாயிகள் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருவதால், பஞ்சாயத்து நிர்வாகம் தலையிட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியில் நிலவுகிறது.
ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி