Tue. Dec 16th, 2025


திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார்.

தாழையூத்து | டிசம்பர் 15, 2025

நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றியம், தாழையூத்து ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்க நிதி மற்றும் 15-வது நிதிக் குழு நிதியின் கீழ், பொதுமக்களின் நீண்ட நாள் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 23 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கனிமம் மற்றும் சுரங்க நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் :

தாழையூத்து மற்றும் வடக்கு தாழையூத்து குக்கிராமங்களுக்கு
1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆற்று குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி – ரூ.34.50 லட்சம்

ஸ்ரீநகர் குக்கிராமத்திற்கு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆற்று குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி – ரூ.16 லட்சம்


15-வது நிதிக் குழு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் :

கதிரவன் நகர், பூந்தோட்டத் தெரு, கணக்குபிள்ளை வீட்டு தெரு பகுதிகளில் டெலிவரி லைன் மற்றும் 330 வீட்டு குடிநீர் இணைப்புகள் (FHTC) ரூ.21.90 லட்சம்

வடக்கு தாழையூத்து ஐந்து லைன் தெரு மற்றும் மெயின் ரோடு காளியம்மன் கோவில் தெரு பகுதிகளில் டெலிவரி லைன் மற்றும் 500 வீட்டு குடிநீர் இணைப்புகள் (FHTC) –ரூ.27.84 லட்சம்

கீழத்தென்கலம் குக்கிராமத்தில் டெலிவரி லைன் மற்றும் 560 வீட்டு குடிநீர் இணைப்புகள் (FHTC) ரூ.17 லட்சம்

நிகழ்ச்சி விவரம் :

இந்த அனைத்து திட்டங்களுக்கும் நெல்லை மத்திய மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.

முன்னிலை வகித்தவர்கள் :

முன்னாள் அமைச்சர் TPM மைதீன் கான்

மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப் பாண்டியன்

திமுக மாநகர துணை செயலாளர் V.S.அப்துல் கையூம்

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீரான்

வரவேற்பு மற்றும் ஏற்பாடுகள் :

இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு மற்றும் ஏற்பாடுகளை தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மானூர் யூனியன் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் S.V.S.பீர் முகைதீன் சிறப்பாக செய்திருந்தார்.

கலந்து கொண்டவர்கள் :

தாழையூத்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காஜா மைதீன்

ஊராட்சி செயலர் திருமதி பாலா

வார்டு உறுப்பினர்கள் அப்துல் தானிஷ், சித்தி பாத்திமா, இசக்கி ராணி, சாரதா மகேஷ், மாரீஸ்வரி, நாகராஜன்

கிளைச் செயலாளர்கள் முஜிப்பூர் ரஹ்மான், பெருமாள், அமல்ராஜ், பண்டாரம்

சங்கர்நகர் பேரூராட்சி கவுன்சிலர் ஜெய்லானி

ராசப்பா (எ) சாகுல் ஹமீது, ஷேக் முகைதீன், ராஜாமணி, அப்துல் காதர், இக்பால், ராஜ், சாகுல் ஹமீது

காங்கிரஸ் நிர்வாகிகள் ஜலால், ஷேக்,

முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல்:

தலைவர் முகமது கனி,
செயலாளர் நாசர்,
பொருளாளர் ஜைனுதீன்,
ஜமாத்தார்கள் அபுசாலி, கமாலுதீன், பக்ருதீன், கலில்

அபுபக்கர் சித்திக் ஜும்மா பள்ளிவாசல்:

தலைவர் முகமது ஹனிஃபா,
செயலாளர் கோல்டன் ஷேக் முகமது,
ஜமாஅத்தார் ரஷித் அலி

ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம், துரை சுடலைமுத்து

உள்ளூர் பொதுமக்கள் மற்றும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இந்த குடிநீர் திட்டங்கள் நிறைவேறும் போது தாழையூத்து, வடக்கு தாழையூத்து, ஸ்ரீநகர் மற்றும் கீழத்தென்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கி, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS