Tue. Dec 16th, 2025

குடியாத்தம் அருகே சேம் பள்ளி கிராமத்தில்
ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலய
மஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம் | டிசம்பர் 15, 2025

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலயத்தின் மஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை வெகு சிறப்பாகவும், பக்தி முறையுடனும் நடைபெற்றது.

முன்னதாக ஆலய கோபுர கலசத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து
கரிக்கோலம், யாகசாலை பூஜைகள், அலங்காரம், புண்யாஹவாசனம், ஸ்ரீ சுத ஹோமம் உள்ளிட்ட வேத முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கலச நீர் ஆலய கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த புனித நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் :

ஊர் பரம்பரை தர்மகர்த்தா – டி.ஜி. பிரபாகர் ரெட்டி

துணை தர்மகர்த்தா – ஆர். சந்திர மௌலி ரெட்டி

தலைவர் – தினேஷ் (எ) துளசி ராமுடு

முன்னாள் தலைவர் – சிட்டி (எ) ஆர். பத்மநாபன்

ஊர் மந்திரிகள், நாட்டாண்மைக்கார்கள், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த கும்பாபிஷேக பெருவிழா, சேம் பள்ளி கிராமத்தில் ஆன்மீக உற்சாகத்தையும், பக்தி பரவசத்தையும் ஏற்படுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS