Tue. Dec 16th, 2025

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக UNEP அமைப்பின் Champions Of The Earth விருதினை திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., அவர்கள் பெற்று ள்ளார்கள். உலக அளவிலில் இந்தியா வுக்கு – தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் இந்த மகிழ்வான தருணத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

1993 ம் வருடம் என்று ஞாபகம் . அப்போது நான் கருவூல துறையில்கணக்கராக பணியாற்றி கொண்டிருந்தேன் . அப்போது தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஓய்வூதிய பணிகளை கணினி மயமாக்கும் பொறுப்பினை நெல்லை NIC ல் மேற்கொண்டு வந்தேன் . அந்த கால கட்டத்தில் இளம் sub Collector சுப்ரியா சாகு, இ.ஆ.ப அவர்கள் தனது அலுவலக பணிகளை கணினி மயப்படுத்துவதற்க்காக NIC(National Informatics Center) கணினி அறைக்கு அடிக்கடி வருகை தருவார் .

திருமதி சுப்ரியா சாகு அவர்கள் தனது டிவிஷன் கட்டுப்பாட்டில் உள்ள கிராம அதிகாரிகள் மாறுதல் (Transfer )தொடர்பான பணிகளை கணினி மயப்படுத்தும் பணிகளில் தனது அலுவலக பணியாளர்கள் எவரையுமே துணைக்கு வைத்து கொள்ளாமல் (May be tokeep confidential )அவரே அனைத்து பணிகளையும் மேற்கொண்டார் . 10×10 அடி  சிறிய கணினி அறையில் எனக்கு அடுத்த கணினியில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டே எவ்வித பந்தாவும் இன்றி அனைவரிடமும் சகஜமாக பேசி கொண்டே கணினியில் உள்ளீடு செய்வார் . அவ்வப்போது மாறுதல் உத்தரவு களையும் பிரிண்ட் செய்து அங்கேயே கையெழுத்திட்டு எடுத்து செல்வார் .

பருவ மழை முன்னேற்பாட்டுக்கு அவர் கணினி மூலம் தயாரித்த அறிக்கை நிர்வாகத்துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்க பட வேண்டிய ஒரு பணியாகும் . அவர் sub Collector ஆக பணியேற்றதற்கு முந்தய வருடம் தான் (1992) நெல்லையில் வரலாறு காணாத மழை வெள்ளம். அடுத்த வருட மழை முன்னேற்பாட்டுக்கு அவர் மாபெரும் ஒரு விபர பட்டியல் தயாரித்தார் ஒரு கிராமம்/நகரம்,  அதில் தொலை பேசி  வைத்திருக்கும் நபர்கள் பட்டியல் துவங்கி, ஊராட்சி தலைவர், தன்னர்வலர்கள், கோயில், பள்ளிவாசல், தேவாலயம், பள்ளிக்கூடம், petromax light,, ஜெனெரேட்டர், டிராக்டர், கார், ரைஸ் மில் ,கயிறு, கோடாரி வைத்திருப்பவர்கள் , உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஓன்று விடாமல் கிராமம் வாரியாக சேகரித்து கணினியில் database ஆக சேமித்து  வைத்த மலைக்க வைக்கும் மிகப்பெரிய labour intensive பணி.  இந்த அறிக்கை கிராமம் வாரியாக print out எடுக்கப்பட்டு அனைவருக்கும் ஒரு காப்பி கொடுக்க பட்டது.

மேற்காணும் இரண்டு  கணினி பணிகளும் தமிழ்நாட்டிலேயே  முதல் முதலாக கணினி மூலம் தயாரித்து அசத்தி காட்டினார் அப்போது தான் பணியில் சேர்ந்த அந்த இளம் IAS அதிகாரி Sub  collector Tmt. Supriya Saku IAS.

அநேக நாட்கள் அந்த சிறிய கணினி அறையில் அவருடன் பேசி கழித்த காலங்கள் இன்னமும் நினைவில். ஒவ்வொரு வாக்கியம் பேசி முடித்த பின் அவர் சிரிக்கும் ஒரு பெரும் சிரிப்பும் மறக்க முடியாது.

இந்த ப்ராஜெக்ட்க்கு செயல் வடிவம் கொடுத்து உயிர் கொடுத்தவர்கள் NIC DIO Mr.Peter, &  NIC – DIA Mr. Venkat  & Mr , Nainar அவர்கள் . இவர்கள் அந்த கால கட்டத்தில் கருவூல துறை உட்பட தமிழ் நாடு அரசு துறை களில் அநேக கணினி முன்னோடி திட்டங்களை தமிழக – தேசிய அளவில் சாதித்து நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்கள்.

இரண்டு பணிகளிலும்   நானும் சிறிது உழைத்திருக்கிறேன் என்பதையும்  தெரிவித்து கொள்கிறேன்.

அந்த காலகட்டத்தில்   அவரின் கணவர் திரு முருகானந்தம் IAS( தற்போதைய தலைமை செயலாளர் ) சேரன்மகாதேவி sub கலெக்டர் ஆக பணி புரிந்தார் . கலெக்டர் கூட்டத்திற்கு வரும்போது எல்லாம் அவரும் NIC கணினி  அறைக்கு மனைவியை காண வருவார்.  அனைவரிடமும் சகஜமாக பேசி செல்வார்.
Kaja Nazeem

Kaja Nazeem ➡️ சிறு குறிப்பு:

எனது மைத்துனர், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய பொறுப்பிலிருந்து படிப்படியாக உயர்ந்து கருவூலத்தில் முக்கிய பொறுப்பிற்க்கு உயர்ந்தவர்.

கருவூலத்தில் கணிணி அறிமுகம் செய்ததில் இருந்து மேலுள்ள பதிவுகள் அனைத்திலும் முக்கிய பங்காற்றியவர். அதே பொறுப்பிலிருந்து உயர்ந்து நாகர்கோவிலில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்திற்கு பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டு ஓய்வுபெறும் வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல அறிவியல் கண்டுபிடுப்புகளுக்காக இந்திய ஜனாதிபதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் களிடமிருந்து பல விருதுகளைப் பெற்றவர்கள் இவரும் இவருடைய மகளும்.

ஷேக் முகைதீன்

இணை ஆசிரியர்.

 

By TN NEWS