Wed. Dec 17th, 2025



தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் சுமார் 450 மாணவர்கள் பங்கேற்று போட்டியிட்டனர். இதில், அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பார்த்தசாரதி, 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம் இடம் பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பெற்றார்.

அதேபோல், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற அரூர் பள்ளி அணியினருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வித்துறை ஆசிரியர்கள்
நல்லாசிரியர் பழனிதுரை,
உடற்கல்வி ஆசிரியர் முருகேசன்
ஆகியோருக்கு பள்ளி சார்பில் சிறப்பு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்–ஆசிரியர் கழகம் இணைந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

வே. பசுபதி
மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி

By TN NEWS