Wed. Dec 17th, 2025

மதுரை:

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக விளங்கும் மதுரை – தொண்டி சாலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேலுநாச்சியார் மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

🛣️🛣️மதுரை – தொண்டி சாலை:

போக்குவரத்து நெரிசலின் மையப்பாதை
மதுரை மாநகரின் மிக முக்கியமான போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் ஒன்றாக மதுரை – தொண்டி சாலை திகழ்கிறது.
இந்தச் சாலையில்

அண்ணா பேருந்து நிலையம்,

ஆவின் சந்திப்பு,

மேலமடை பகுதி

ஆகிய இடங்களைச் சுற்றி ஏராளமான

கல்வி நிறுவனங்கள்,

மருத்துவமனைகள்,

தொழிற்நிறுவனங்கள்,

வணிக வளாகங்கள்,

குடியிருப்புப் பகுதிகள்

அமைந்துள்ளதால், இப்பாதையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக, குறிப்பாக பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிக நெரிசல் நேரங்களில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை, விபத்து அபாயம், ஒலி–காற்று மாசுபாடு போன்ற பல சிக்கல்கள் பொதுமக்களை பாதித்து வந்தன.

நெரிசலுக்கு நிரந்தர தீர்வு: 2023-ல் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல்

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்,
அண்ணா பேருந்து நிலையம் – ஆவின் சந்திப்பு – மேலமடை ஆகிய மூன்று முக்கிய பகுதிகளையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தப் பணிகளை திவா. நாத் இந்தியா ப்ராஜக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, 30.10.2023 அன்று மேம்பாலப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன.

👍நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகள் – சாதனை வேகம்:

அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள், அதாவது பணிகள் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள், மிக விரைவாகவும் தரமாகவும் பணிகள் நிறைவு பெற்று, இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்:

இந்த வேலுநாச்சியார் மேம்பாலம்:

மேலமடை சந்திப்பில் மையத் தடுப்புடன் கூடிய 4 வழித்தட சாலை மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

25 பிரம்மாண்ட தூண்கள் தாங்க,

மொத்தம் 950 மீட்டர் நீளத்திற்கு,

மிகவும் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாலத்தின் இருபுறமும் 7.5 மீட்டர் அகலத்தில் அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


நில எடுப்பு இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தொழில்நுட்பம்:

ஆவின் சந்திப்பில் இருந்து அப்பல்லோ சந்திப்பு வரை இருந்த திறந்தவெளி வாய்க்கால் மீது நில எடுப்பு செய்யாமலேயே,
900 மீட்டர் நீளத்திற்கு நவீன கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

அந்த கான்கிரீட் தளத்தின் மேல் இடதுபுற சேவை சாலை அமைக்கப்பட்டிருப்பது, இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான தொழில்நுட்பச் சாதனையாக கருதப்படுகிறது.

4 வழிச்சாலையாக விரிவாக்கம் – நடைபாதை, மின்விளக்குகள்

மேலும்,
அண்ணா பேருந்து நிலையம் முதல் ஆவின் சந்திப்பு வரை
நில எடுப்பு செய்யப்பட்டு, சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதில்:

🚧பாதசாரிகளுக்கான பாதுகாப்பான நடைமேடைகள்,

🚌🚐பேருந்து நிறுத்தங்களுக்கு தனி இடவசதி,

🚏🛣️🔴மேம்பாலம் மற்றும் சேவை சாலைகளில் நவீன உயர் மின்விளக்கு வசதிகள்
என அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.


🚥🚦🚗ரவுண்டானாவுடன் சிக்னல் இல்லா பயணம்:

ஆவின் சந்திப்பு மற்றும் மேலமடை சந்திப்புக்கு கீழே ரவுண்டானா அமைக்கப்பட்டு முழுமையான மேம்பாடு செய்யப்பட்டுள்ளதால்,
சிக்னல் இல்லாமல் பொதுமக்கள் தடையின்றி பயணிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

🚔போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்:

இந்த புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம்,
மதுரை – தொண்டி சாலையில் கோரிப்பாளையம் முதல் ரிங் ரோடு வரை இருந்த போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🏵️🏵️🏵️🏵️இதன் பயனாக:

பயண நேரம் குறையும்

எரிபொருள் சேமிப்பு

விபத்து அபாயம் குறைவு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பொதுமக்களின் வாழ்வாதார வசதி மேம்பாடு

என பல்வேறு பலன்கள் கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

✍️ ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS