
தருமபுரி, டிசம்பர் 7:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்து வந்து, நீலகிரி பிளேட் வனப்பகுதி கரையில் ஒதுங்கியிருந்தது. இதைக் கண்ட அந்த வழியாக சென்ற உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில்,
பாலகிருஷ்ணன், பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் முரளி, ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர்.
கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்…?
சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால், அந்த நபர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து,
சடலத்தின் அடையாளம்,
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்…?
சம்பவத்தின் பின்னணி காரணம்…?
ஆகியவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
📍 திருவண்ணாமலை மாவட்டம் – நிருபர்
க. ஏழுமலை
