திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவுவதை கண்டித்து போராட்டம் காவல்துறை கைது நடவடிக்கை.
சென்னை, நவம்பர் 27, 2025
ஈழத்திலுள்ள திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை அமைத்து, தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுத்தும் நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து சென்னை நகரில் போராட்டம் நடைபெற்றது.
இலங்கை தூதரக முற்றுகை முயற்சி:
இலங்கை அரசின் இந்த செயலுக்கு எதிராக,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட தமிழ் முன்னேற்றப் படை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
வீரலட்சுமி தலைமையில் போராட்டம்:
தமிழ் முன்னேற்றப் படை தலைவி வீரலட்சுமி அவர்களின் தலைமையில் கழகத்தின் பல உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து தூதரகத்தை நோக்கி முற்றுகை நடத்த முயன்றனர்.
போராட்டக்காரர்கள் கைது:
நிகழ்வினை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் தலையிட்டு, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர். இந்த போராட்டம் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு டுடே சென்னை செய்தியாளர்
எம். யாசர் அலி