
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு நோட்டுக்கள், பேனா, இனிப்பு வழங்கிய திமுகவினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு அறப்பணி நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
செங்கம் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு மற்றும் மாணவரணி செயற்பாட்டாளர் சுரேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில், ஆண்டிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் தம்பு நாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, இனிப்பு, காரம் வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த அறப்பணி நிகழ்வில்:
செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் த. மனோகரன்,
கிளை செயலாளர்கள் ராமன் ஆசிரியர், மோகன், ராஜவேல், வெங்கட்ராமன், சந்திரன், ராமசாமி, பூபதி, ராஜேஷ்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
📌 திருவண்ணாமலை மாவட்ட நிருபர்:
க. ஏழுமலை
