தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலாகிய நவம்பர் 26-ம் தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர். ரஞ்சிதம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நமது நாட்டின் அரசியலமைப்பை வடிவமைத்த பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க பங்கைக் கௌரவிக்கும் வகையில், இந்த நாள் நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிப்பது பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி வே. பசுபதி வெளியிட்டுள்ளார்.
