தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையும், வரவிருக்கும் கழக இளைஞரணி மண்டல மாநாட்டையும் முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர் திரு. பி. பழனியப்பன், M.Sc., Ph.D, அவர்கள் தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. ஆர். சிவகுரு வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட துணை அமைப்பாளர்கள் திரு. மகேஷ்குமார், திரு. நாசர், திரு. ஹரிபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்:
• வரும் நவம்பர் 27 அன்று, துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
ஏழை, எளிய குடும்பங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கி சமூக நலத்தினை வலுப்படுத்துவது.
• வரவிருக்கும் கழக இளைஞரணி மண்டல மாநாட்டில் மாவட்ட அளவில் சிறப்பான பங்கேற்பை உறுதி செய்வது.
பங்கேற்பாளர்கள்:
கூட்டத்தில், ஒன்றிய, நகர மற்றும் பேரூர் அளவிலான இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் திரு. முத்துக்குமார் மற்றும்
தருமபுரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சி. சண்முகம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வே. பசுபதி
மக்கள் தொடர்பு அதிகாரி