வேலூர் மாவட்டம், குடியாத்தம் – சேத்து வண்டை பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று (நவம்பர் 20) காலை மாணவர்களுக்கான சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியதுடன், “சுதேசி வாழ்வியல் நமது கடமை… சுயசார்பு பாரதம் நமது பெருமை” என்ற வாசகத்துடன் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
முக்கிய நிகழ்வுகள்:
இந்த நிகழ்வு பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் பி. கார்த்தியாயினி , மாவட்ட தலைவர் தசரதன் விநாயகம்,
மகளிர் அணி மாவட்ட தலைவர் சுகன்யா தலைமையில் நடைபெற்றது.
பெருமளவு மாணவர்கள் பங்கேற்பு. 700 மாணவர்கள், 20 ஆசிரியர்கள், வேலூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள்,
மாவட்ட நிர்வாகிகள், குடியாத்தம் நகர நிர்வாகிகள்,
கே.வி. குப்பம் ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் திரளாக பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு சுதேசி உணர்வு, தன்னம்பிக்கை, நாட்டுப்பற்று ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்,
கே.வி. ராஜேந்திரன்