Fri. Nov 21st, 2025

சென்னை, 20 நவம்பர் 2025.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி, அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சார்பில் எழும்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் 9 மாவட்ட கழக செயலாளர்கள் முன்னிலையில், நூற்றுக்கணக்கான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆளும் திமுக அரசு முறைகேடுகளில் ஈடுபடுகிறது — ஜெயக்குமார் குற்றச்சாட்டு…?

ஆர்ப்பாட்டத்தைத் தலைமையேற்று உரையாற்றிய அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் வடசென்னை தெற்கு–கிழக்கு மாவட்ட செயலாளர் டி. ஜெயக்குமார் அவர்கள்,

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் திமுகவினர் பல்வேறு முறைகேடுகளை செயல்படுத்தி வருகிறார்கள்,

தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுறுத்தல்களை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பின்பற்றவில்லை,

“அறிவுறுத்தலுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” எனத் திட்டவட்டமாக எச்சரித்தார்.

கண்டன முழக்கங்கள் — “ஒரே இடத்தில் 68 வாக்காளர்களா?”

ஆர்ப்பாட்டத்தின்போது, அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி தலைமையில் கடும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக,

கொளத்தூர் தொகுதியில் ஒரே முகவரியில் 68 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்,
இது ஆளும் கட்சியின் திட்டமிட்ட முறைகேடு எனக் கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.

“ஜனநாயகத்தை காக்க அதிமுக போராடும்” — ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:

“தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வாக்காளர் தீவிர திருத்தத்தை ஆதரிக்கிறது.”

“இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் செயல்முறையை சீரழிக்க திமுக முயல்கிறது; அதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.”

“சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுரு, இரண்டு திமுக அமைச்சர்களுடன் சேர்ந்து திமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார்.”

“அரசுப் பணியில் பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் திமுகவுக்கு சாதகமாக செயல்படுவதை அதிமுக அமைதியாக பார்க்காது. இன்று கண்டிப்போம் — ஆட்சி மாறியபின் தண்டிப்போம்.”

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.

பத்திரிகை சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுகளாக முகவரி மாறியவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பாஜக ஆதரிப்பதால் அதிமுக ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு; வெளிப்படைத்தன்மைக்காகவே ஆதரிக்கின்றோம்.

திமுகவினர் பிஎல்ஓ (BLO) என்ற பெயரில் தங்களுக்கு சாதகமான நபர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

பிஎல்ஓக்களுடன் திமுக முக்கிய பிரமுகர்கள் வீடு வீடாக சென்று, தங்களுக்கு சாதகமாக செயல்பட அழுத்தம் கொடுக்கின்றனர்.

இந்த செய்தியை வழங்குபவர்:
சென்னை மாவட்ட செய்தியாளர்
எம். யாசர் அலி

By TN NEWS