Wed. Nov 19th, 2025



வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18

SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு FERA கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று (17.11.2025) மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆண் 15 பேர், பெண் 10 பேர் என மொத்தம் 25 பேர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இவர்கள், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான நேரம் போதாமை காரணமாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கால அவகாசம் நீட்டிப்பு அவசியம் எனவும் தெரிவித்தனர்.

கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்




By TN NEWS