
வடசென்னை – கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: புதிய காவல் நிலையம், நூலகம் திறப்பு
இன்று வடசென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தார்.
முதலில், பெரவள்ளூர் காவல் நிலையத்தின் புதிய கட்டுமானப் பணிகளை முதல்வர் அவர்கள் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, கொளத்தூர் தொகுதி மக்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட “முதல்வர் படைப்பகம் நூலகத்தை” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர், கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தொகுதி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொளத்தூர் தொகுதியின் தற்போதைய நிலை, மக்களிடமிருந்து கிடைக்கும் கோரிக்கைகள், நடைபெற்று வரும் திட்டங்கள், எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை பற்றி முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து வழிகாட்டுதல்கள் வழங்கினார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில்
இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு,
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,
பாராளுமன்ற உறுப்பினர் கிரிராஜன்,
திமுக தலைமை நிலை உறுப்பினர் ரங்கநாதன்,
உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை மாவட்ட செய்தியாளர்
எம். யாசர் அலி
