கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாமி கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பான விழா நடைபெற்றது.
விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திருமதி R. சித்ரா அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர் ஆ. கோபி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு தன்னார்வலர் கூட்டமைப்பு – கள்ளக்குறிச்சி அவர்கள் முன்னிலை வகித்தார்.
விழாவில் ஆசிரியர்கள் திருமதி P. சித்ரா, திருமதி ஷகர்பானு, சிறப்பு விருந்தினர்களாக மீனாட்சி நிறுவனர் அருவி அறக்கட்டளை திருமதி செல்வி, திருமலை அறக்கட்டளை நிறுவனர் திருமதி மதலேனால், சபரியேல் நினைவு அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஷேக் முகைதீன்,
இணை ஆசிரியர்



