பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு மீட்பு நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை!
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், வேலைக்காக சென்றிருந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தீவிரவாத குழுவால் கடத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடையநல்லூர் அருகே கண்மணியாபுரத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (27) மற்றும் முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் (36) ஆகியோர் மாலி நாட்டின் கோப்ரி பகுதியில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி, மாலி பகுதியில் செயல்படும் தீவிரவாதக் குழுவினர், அங்கிருந்த 5 இந்தியர்களை, உட்பட சுரேஷ் மற்றும் இசக்கிராஜை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரின் உறவினர்கள் பெரும் அச்சத்துடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி தலையீடு செய்து அவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: ராமர்
